லியோ படத்தில் விஜய்யுடன் நடிக்கிறாரா லெஜண்ட் சரவணன்.. வெளிவந்த வீடியோ

Kathick
in பிரபலங்கள்Report this article
லெஜண்ட் சரவணன்
லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் லெஜண்ட் சரவணன். இவர் அடுத்ததாக புதிய படத்திற்கான கதை கேட்டு வருகிறாராம்.
விரைவில் லெஜண்ட்டின் இரண்டாவது படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீரில் இருந்து வீடியோ ஒன்றை லெஜண்ட் சரவணன் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லியோ படத்தில் லெஜண்ட் நடிக்கிறாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
லியோ விஜய்யுடன் லெஜண்ட் சரவணனா?
லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருவதால் இந்த குழப்பம் எழுந்துள்ளது.
விஜய்யுடன் லெஜண்ட் நடிக்கிறாரா என்று ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில், அப்படி எடுத்துவும் நடக்கவில்லை.
காஷ்மீர் சென்றிருக்கும் லெஜண்ட் சரவணன், அங்கிருந்து தான் எடுத்த வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளாரே தவிர, லியோ படத்தில் அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த வீடியோ..
#Legend in #Kashmir #TheLegend#LegendSaravanan pic.twitter.com/fYYZ3RsvvD
— Legend Saravanan (@yoursthelegend) February 21, 2023
விருமாண்டி படத்தில் கமல், அபிராமியுடன் அஜித்! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்