ஜவான் படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ ரோலில் நடித்த லியோ பட டாப் நடிகர்.. அதிர்ந்த திரையரங்கம்
ஜவான்
இன்று உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லீஸ் தயாரித்திருந்தது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கேமியோ ரோலில் டாப் நடிகர்
ஜவான் படத்தில் தளபதி விஜய் கேமியோ ரோலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் கேமியோ ரோலில் நடிக்கவில்லை என அட்லீ உறுதி செய்தார்.

ஆனால், விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்தின் வில்லன் சஞ்சய் தத் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடித்து அசத்தியுள்ளார். அவர் என்ட்ரி கொடுக்கும் போது திரையரங்கமே அதிர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.