கே.ஜி.எப் வசூல் சாதனையை அடித்து நொறுக்கிய விஜய்.. பட்டையை கிளப்பும் லியோ
லியோ ப்ரீ புக்கிங்
விஜய்யின் லியோ படம் வெளிவருவதற்கு முன்பே ப்ரீ புக்கிங்கில் பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. அதை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம்.
இதுவரை உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் லியோ வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் விஜய் படத்திற்கு மாபெரும் வசூல் கண்டிப்பாக கிடைக்கும் என்பதை அனைவரும் அறிவோம்.
தமிழ்நாட்டையும் தாண்டி விஜய்யை பெரிதளவில் கொண்டாடும் இடம் என்றால் அது கேரளா தான். ஆனால் தற்போது கேரளாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்றால், அது யாஷ் நடித்த கே.ஜி.எப் 2 படம் தான்.
கே.ஜி.எப் வசூலை ஓரங்கட்டிய விஜய்
ஆம், கே.ஜி.எப் 2 முதல்நாளில் ரூ. 7.25 கோடி வரை வசூல் செய்து கேரளாவில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையாக இதுவரை இருந்தது. இந்த சாதனையை தற்போது லியோ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே முறியடித்துள்ளது.
லியோ படத்திற்கான ப்ரீ புக்கிங் கேரளாவில் மட்டுமே ரூ. 7.4 கோடிக்கும் மேல் வசூல் சென்றுவிட்டது.
இதன்மூலம் கேரளாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற மாபெரும் சாதனையை லியோ படைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நம்ம ஊருனு ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீங்க - வைரலாகும் விமானியின் பேச்சு! IBC Tamilnadu

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
