முன்பதிவிலேயே ஜெயிலருக்கு செக் வைத்த லியோ..இவ்வளவு லட்சமா..
லியோ - ஜெயிலர்
லியோ படம் ஜெயிலர் வசூல் முறியடிக்கும் என்ற பேச்சு ஒரு புறமும், இல்லை இல்லை அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்ற பேச்சு மறுபுறமும் தான் தற்போது நிலவி வருகிறது.

ஜெயிலர் உலகளவில் ரூ. 600 கோடியை கடந்து வசூல் செய்துவிட்டது. இதன்பின் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் மிகப்பெரிய படம் என்றால் லியோ தான். தளபதி விஜய் நடித்திருக்கும் இப்படத்தை லோகேஷ் இயக்கியுள்ளார்.
லியோ படம் ரூ. 434 கோடி ப்ரீ பிசினஸில் ஆகியுள்ளது என கூறப்படுகிறது. இதனால் கண்டிப்பாக எதிர்பார்க்காத வசூல் சாதனையை லியோ நிகழ்த்தும் என்கின்றனர். லியோ படத்தின் ப்ரீ புக்கிங்கில் நேற்று UKவில் துவங்கியுள்ளது.
செக் வைத்த லியோ
இந்நிலையில், இதுவரை 2500 டிக்கெட்ஸ் விருப்பனை ஆகியுள்ள நிலையில், 50K $ வசூல் செய்யப்பட்டுள்ளதாம். இது நம் இந்திய கணக்கின்படி ரூ. 41 லட்சம் வரை இருக்கும் என்கிறார்கள்.

இதனால் ஜெயிலர் படத்தின் முன்பதிவை விட லியோ படத்திற்கு அதிக முன்பதிவு ஆகியுள்ளது என கூறப்படுகிறது. முன்பதிவிலேயே ஜெயிலர் படத்திற்கு லியோ செக் வைத்துவிட்டது என பேசப்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்தடுத்து என்னென்ன நடக்க போகிறது என்று.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri