லியோ IMAXல் மட்டுமே இத்தனை கோடி.. வசூல் பொய் என சொன்னவர்களுக்கு தயாரிப்பாளர் பதிலடி
லியோ படம் முதல் 7 நாட்களில் 461 கோடி வசூலித்ததாக 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்து இருந்தது. ஆனால் அது உண்மை இல்லை, தயாரிப்பாளர் தொகையை உயர்த்தி கூறுகிறார் என ஒரு தரப்பினர் விமர்சித்தனர்.
இதற்கு தயாரிப்பாளர் லலித் தற்போது பதிலடி கொடுத்து இருக்கிறார். "பொய் சொல்லணும்னு அவசியம் இல்லை. வந்த வசூலை தான் நான் அறிவித்து இருக்கிறேன்" என கூறி இருக்கிறார்.
IMAX வசூல்..
தமிழ்நாட்டில் IMAXல் தமிழ்நாட்டில் வெறும் 3 தியேட்டர்கள் தான் இருகிறது. ஆனால் உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அவற்றை தமிழ் தயாரிப்பாளர்கள் குறி வைக்க வேண்டும்.
அவர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பே கன்டென்ட் கொடுக்க வேண்டும். அப்போது தான் சரியான நேரத்தில் QC செய்து ரிலீஸ் செய்ய முடியும்.
லியோ படம் IMAXல் மட்டுமே 40 கோடி ருபாய் வசூலித்து இருக்கிறது, அது மிகப்பெரிய தொகை என லலித் குமார் தெரிவித்து இருக்கிறார்.