லியோ திரைப்படம் 19ஆம் தேதி வெளியாகாது.. அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்ட நீதி மன்றம்
பிரச்சனை மேல் பிரச்சனை
தொடர்ந்து விஜய்யின் லியோ படத்திற்கு ஒவ்வொரு பிரச்சனைகளாக வந்துகொண்டே இருக்கிறது. தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சி வேண்டும் என கேட்டு நீதிமன்றத்தில் முறையிட்ட தயாரிப்பாளர் லலித்.
ஆனால், 4 மணி காட்சி கிடையாது என்றும் தமிழக அரசின் உத்தரவிட்டால் 7 மணி காட்சி திரையிடலாம் என நீதிமன்றத்தில் கூறப்பட்டது. மேலும் படம் சொன்ன தேதில் வெளிவருமா வராதா என்று ரசிகர்கள் தற்போது வரை பீதியிலேயே இருக்கிறார்கள்.
வெளியிட தடை
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய பிரச்சனை என்னவென்றால் தெலுங்கில் லியோ திரைப்படம் அக்டோபர் 20ஆம் தேதி வெளியிட கூடாது என கூறி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. LEO என்கிற தலைப்பு தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என கூறப்படுகிறது.
விரைவில் இந்த பிரச்சனையை சுமுகமாக முடித்து படத்தை அக்டோபர் 19ஆம் தேதி வெளியிட விநியோகஸ்தர் சித்தாரா என்டர்டைன்மெண்ட் மற்றும் தயாரிப்பாளர் லலித் முயற்சி எடுப்பார்கள் என கூறப்படுகிறது.
You May Like This Video
