மூன்று நாட்களில் லியோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் லியோ. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் சில கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

ஆனாலும் கூட மக்கள் இப்படத்திற்கு அமோக ஆதரவை கொடுத்து வருகிறார்கள். உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 148 கோடிக்கும் மேல் வசூல் செய்த லியோ படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
மூன்று நாள் வசூல்
அதன்படி, லியோ திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் ரூ. 280 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம் இன்னும் ஒரே நாளில் விஜய்யின் சினிமா கெரியரில் அதிக வசூல் செய்த வாரிசு படத்தின் மொத்த வசூலையும் லியோ முறியடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் நாட்களில் என்னென்ன புதிய வசூல் சாதனைகளை லியோ படைக்க போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
You May Like This Video
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri