இதுவரை ப்ரீ புக்கிங்கில் லியோ செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
லியோ
விஜய் நடிப்பில் இதுவரை வெளிவந்த எந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
அந்த அளவிற்கு லியோ படத்தை உலகளவில் உள்ள விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக லோகேஷ் - விஜய் கூட்டணி என்பதால் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதை முழுமையாக இந்த கூட்டணி பூர்த்தி செய்யும் என்கின்றனர். அதை பொறுத்திருந்து பார்ப்போம். லியோ படத்தின் ப்ரீ புக்கிங் பட்டையை கிளப்பி வருகிறது.
ப்ரீ புக்கிங் வசூல்
இதுவரை உலகளவில் ரூ. 17 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளது. குறிப்பாக வட அமெரிக்காவில் மட்டுமே 1 மில்லியன் வரை வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.

இதுவே லியோ படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு ஆகும். இதனால் கண்டிப்பாக முதல் நாள் வசூல் இதுவரை எந்த ஒரு விஜய் படமும் செய்திராத வசூல் சாதனையை செய்யும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri
கடும் நெருக்கடிக்கு மத்தியில்... ரஷ்ய எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்ய உள்ள இந்திய நிறுவனம் News Lankasri