லியோ படத்தின் இரண்டாவது பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்
லியோ
தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரித்து வருகிறார். மேலும் அனிருத் இசையமைக்கிறார்.
விஜய்யுடன் இணைந்து திரிஷா, கவுதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் கண்டிப்பாக மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படத்திலிருந்து ஏற்கனவே அனிருத் இசையில் முதல் பாடல் 'நா ரெடி' வெளிவந்து youtube 100 மில்லியன் பார்வர்களை கடந்துள்ளது.
இரண்டாவது பாடல்
இந்நிலையில், லியோ படத்தின் இரண்டாவது பாடல் இந்த மாதம் இறுதிக்குள் வெளிவரவுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்த பாடல் கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கான ட்ரீட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் இரண்டாவது பாடலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண அழைப்பிதழ்.. திருமணம் எங்கு நடக்கிறது தெரியுமா