லியோ வெற்றி விழா நடக்காதா? தயாரிப்பாளர் விண்ணப்பம் நிராகரிப்பு
லியோ படத்தின் ரிலீசுக்கு முன்பு இசை வெளியீட்டு விழா நடத்த ஏற்பாடுகள் நடந்த நிலையில் கடைசி நேரத்தில் விழா ரத்து செய்யப்பட்டது. அரசியல் அழுத்தம் காரணம் இல்லை, டிக்கெட்டுக்கு அதிகம் டிமாண்ட் இருந்ததால் தான் ரத்து செய்ததாக தயாரிப்பாளர் கூறினார்.
லியோ படம் ரிலீஸ் ஆகி தற்போது பெரிய அளவில் வசூலித்து வெற்றி பெற்று இருக்கிறது. இந்நிலையில் வெற்றி விழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தயாரிப்பாளர் லலித் குமார் விண்ணப்பித்து இருக்கிறார்.

நிராகரிப்பு
லியோ தயாரிப்பாளர் சமர்ப்பித்த விண்ணப்பம் தற்போது நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் லியோ வெற்றி விழா நடக்குமா நடக்காதா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது.
மீண்டும் விண்ணப்பத்தை இ-மெயிலில் தயாரிப்பு நிறுவனம் அனுப்பி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
