தமிழ் நாட்டில் மட்டுமே லியோ இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
லியோ
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த லியோ உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இதுவரை உலகளவில் ரூ. 553 கோடிக்கும் மேல் வசூல் செய்த லியோ பல இடங்களில் லாப கணக்கை துவங்கிவிட்டது. இதுவரை எந்த ஒரு விஜய் படமும் செய்யாத வசூல் சாதனையை லியோ செய்து வருகிறது.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையா.. ஐஸ்வர்யா ராய் கிடையாதாம்
தமிழக வசூல்
இந்நிலையில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, லியோ படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 192.5 வரை வசூல் செய்துள்ளதாம்.
இனி வரும் நாட்களில் தமிழகத்தில் ரூ. 200 கோடி வசூல் செய்ய வாய்ப்புகள் இருக்கிறது என்று திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஏனென்றால் அடுத்த வாரம் வரை பெரிய படங்கள் எதுவும் வரவில்லை. இதனால் லியோ படத்தின் வசூல் நன்றாகவே இருக்கும் என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் தமிழகத்தில் ரூ. 200 கோடி வசூல் செய்கிறதா லியோ என்று.