லியோ vs ரோலக்ஸ்.. ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி! இப்படியா பண்றது
லியோ
விஜய் தற்போது நடித்து வரும் லியோ படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் (LCU)-ல் இருக்குமா இல்லையா என்கிற கேள்வி தான் ரசிகர்கள் எல்லோர் மனதிலும் இருந்து வருகிறது.
LCU படமாக இருந்தால் அதில் நிச்சயம் விக்ரம் (கமல்) மற்றும் ரோலக்ஸ் (சூர்யா) ஆகியோரும் லியோ படத்தில் வர வாய்ப்பிருக்கிறது.
பிளேம்ஸ் போட்ட ரசிகர்கள்
LCU பற்றிய குழப்பம் ஒருபக்கம் இருக்க, தற்போது ரசிகர்கள் சிலர் Leo மற்றும் Rolex ஆகிய பெயர்களுக்கு FlAMES போட்டு பார்த்திருக்கிறார்கள். அதில் Enemy என வந்திருப்பதை போட்டோவாக இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.
அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், இந்த அட்ராசிட்டியை செய்தது நிச்சயம் 90ஸ் கிட்ஸ் ஆக தான் இருக்கும் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
திருமணம் பற்றி ஓவியா எடுத்த அதிர்ச்சி முடிவு! ஏன் என் உயிரை எடுக்குறீங்க..