ஐஸ்வர்யா ராயை இனியாவது படம் நடிக்க விடுங்க! - கேட்டவருக்கு கணவர் கொடுத்த பதிலடி
ஐஸ்வர்யா ராய்
நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வென்ற பிறகு சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிக்க தொடங்கினர். இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நிலையில் தமிழ்நாட்டில் அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
எந்திரன் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்காத ஐஸ்வர்யா ராய், தற்போது பொன்னியின் செல்வன் படம் மூலமாக கம்பேக் கொடுத்து இருக்கிறார். தற்போது PS 2 படம் வெளியாகி இருக்கும் நிலையில் ஐஸ்வர்யா ராய் நடிப்புக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.
இனி நடிக்க விடுங்க..
இந்நிலையில் ட்விட்டரில் ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பொன்னியின் செல்வன் படத்தை புகழ்ந்து பதிவிட்டு இருக்கிறார். அதற்க்கு கமெண்ட் செய்த ஒரு ரசிகர் 'இனியாவது அவரை அதிக படங்களில் நடிக்க விடுங்கள், ஆராத்யாவை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்' என கூறி இருக்கிறார்.
"நடிக்க விட வேண்டுமா? சார்.. அவர் எதை செய்வதற்கும் என் அனுமதி தேவையில்லை. குறிப்பாக அவர் அதிகம் விரும்பும் ஒரு விஷயத்தை" என அபிஷேக் பச்சன் அவருக்கு கூலாக பதில் கொடுத்து இருக்கிறார்.


மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
