பழைய ட்விட்டை வைத்து விஜய் தேவரகொண்டாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்! இதுக்கு இப்படி ஒரு பில்டப்பா..
லைகர் படத்தை ஓவர் பில்டப் செய்த விஜய் தேவரகொண்டாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
லைகர்
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் படம் இன்று ரிலீஸ் ஆனது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
Public Opinion வீடியோக்களில் ரசிகர்கள் படத்தை கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து இடங்களிலும் நெகடிவ் ரெஸ்பான்ஸ் தான் வந்துகொண்டிருக்கிறது என்பதால் வசூல் நிச்சயம் பாதிப்பை சந்திக்கும் என தெரிகிறது.
விஜய் தேவரகொண்டா பழைய ட்வீட்
விஜய் தேவரகொண்டாவின் பழைய ட்விட் தற்போது வைரல் ஆகி வருகிறது. லைகர் படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய 200 கோடிக்கு OTT நிறுவனங்கள் கேட்கிறார்கள், அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது என செய்தி வந்தபோது அவர் செய்த ட்விட் தான் அது.
200 கோடி மிக குறைவு, தியேட்டரில் அதை விட மிக அதிகம் சம்பாதிக்கும் என ட்விட் செய்து இருக்கிறார் அவர்.
Too little.
— Vijay Deverakonda (@TheDeverakonda) June 21, 2021
I’ll do more in the theaters. pic.twitter.com/AOoRYwmFRw