ஏ. ஆர். ரஹ்மான் ஸ்டுடியோவில் லைட்மேன் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
AR பிலிம் சிட்டி
இசைப்புயல் ஏ. ஆர் ரகுமான் கும்மிடிப்பூண்டியில் AR பிலிம் சிட்டி நடத்தி வருகிறார். இங்கு சில படப்பிடிப்புகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று.
நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் வெப்பன் படத்திற்கான படப்பிடிப்பு AR பிலிம் சிட்டியில் நடந்துள்ளது. இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 47 வயதானவர் லைட்மேன் குமார், இவர் 40 அடி உயரத்தில் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது கால் தடுக்கி கீழே விழுந்துவிட்டார்.
உயிரிழப்பு
அவரை உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்த விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத போட்டோ