பிளாக் பஸ்டர் படத்தின் முதல் பாதியை மட்டும் கேட்டு, இயக்குனரை திருப்பி அனுப்பிய விஜய் !
66-ல் பிஸியாக இருக்கும் விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது அவரின் 66-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் ஹைதெராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது.
மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற தவறியது.
இந்நிலையில் விஜய் அவரின் திரைப்பயணத்தில் நிறைய திரைப்படங்களை மிஸ் செய்துள்ளதாக பல தகவல்களை கேள்விப்பட்டுள்ளோம்.

பிளாக் பஸ்டர் படத்தை மிஸ் செய்த விஜய்
அந்த வகையில் லிங்குசாமி சண்டக்கோழி திரைப்படத்தின் கதையை விஜயிடம் தான் முதலில் கூறியுள்ளார். அப்படத்தின் கதையை கேட்கும்போது விஜய் முதல் பாதியை மட்டும் கேட்டுவிட்டு வேண்டாம் என இயக்குனரை திருப்பி அனுப்பிவிட்டாராம்.
அதன்பின் சண்டக்கோழி திரைப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த நிலையில் லிங்குசாமியை ஹோட்டலில் சந்தித்துள்ளார் விஜய். அப்போது லிங்குசாமி விஜய்யிடம் இந்த கதையை வேண்டாம் சொல்லிட்டீங்களே என பேசியுள்ளார்.
அதற்கு விஜய் இந்த பையன் (விஷால்) தான் கரெக்ட்டான சாய்ஸ், திரையுலகிற்கு இப்படியொருவர் வரணும்னு இருக்கு" என சொன்னாராம்.

இசையமைப்பாளர் டி.இமானா இது?- பள்ளி பருவத்தில் எப்படி என்ன வேலை செய்துள்ளார் பாருங்க