ஜன நாயகன் படத்திற்கு முன் பொங்கலுக்கு ரிலீஸான விஜய்யின் படங்கள்.. முழு விவரம்
ஜனநாயகன்
எந்த மொழி நடிகராக இருந்தாலும் சரி, முன்னணி நடிகர் என்றால் அவரது படம் வருடா வருடம் ரிலீஸ் ஆக வேண்டும் என்று தான் ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்.
ரசிகர்களின் ஆசைக்கு ஏற்ப பிரபலங்களும் படங்கள் கமிட்டாகி நடித்த வண்ணம் இருப்பர்.
ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் நடிகராக இருக்கும் விஜய் இனி சுத்தமாக நடிக்கவே போவதில்லை என கூறியிருப்பது சினிமா ரசிகர்களுக்கே ஒரு வருத்தமான விஷயமாக உள்ளது.
இந்த களத்தை தாண்டி ஒரு பெரிய களம் காண தான் அவர் இந்த முடிவு எடுத்துள்ளார் என்பது ஆறுதல் விஷயமாக உள்ளது.
பொங்கல் ரிலீஸ்
நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் 2026ம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக உள்ளதாம்.
இந்த அறிவிப்பை நேற்று (மார்ச் 24) தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. தற்போது நாம் இந்த படத்திற்கு முன் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆன விஜய்யின் படங்கள் என்னென்ன என்பதை காண்போம்.
பொங்கலில் இதுவரை விஜய்யின் 14 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளதாம், ஜனநாயகன் 15வது படமாம்.
- கோயம்புத்தூர் மாப்பிள்ளை (1996)
- காலமெல்லாம் காத்திருப்பேன் (1997)
- கண்ணுக்குள் நிலவு (2000)
- பிரெண்ட்ஸ் (2001)
- திருப்பாச்சி (2005)
- ஆதி (2006)
- போக்கிரி (2007)
- வில்லு (2009)
- காவலன் (2011)
- நண்பன் (2012)
- ஜில்லா (2014)
- பைரவா (2017)
- மாஸ்டர் (2021
- வாரிசு (2023)