தளபதி 67 திரைப்படத்தை இயக்கும் முன் லோகேஷ் கனகராஜ் எடுத்துள்ள முடிவு ! குவியும் பாராட்டுக்கள்..
விக்ரம்
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக கருதப்பட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவே அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் இயக்குநராக மாறியுள்ளார்.
ஆம், அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை அடைந்துள்ளது. கடந்த 15 நாட்களாக விக்ரம் திரைப்படம் குறித்தும் அப்படம் செய்து வரும் வசூல் சாதனைகளை குறித்தும் தான் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி விக்ரம் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 345 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது, மேலும் தமிழ்நாட்டில் பாகுபலி பட சாதனையை முறியடித்து அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைக்க இருக்கிறது.

தளபதி 67
இந்நிலையில் தற்போது நேற்று விக்ரம் படத்தின் சக்சஸ் மீட்டில் லோகேஷ் சொன்ன விஷயம் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதன்படி லோகேஷ் “விக்ரம் திரைப்படம் வெற்றியடைந்து விட்டதால், அதனை மனதில் எடுத்துக்கொண்டு.
எனது அடுத்த திரைப்படத்தில் மந்தமாக வேலை செய்ய மாட்டேன். இனி என் அடுத்த படத்திற்கு இன்னும் கூடுதல் பொறுப்புடன், நம்பிக்கையுடன் இங்கிருந்து நான் என் அடுத்த படத்திற்கு செல்கிறேன்” என பேசியிருந்தார்.
எனவே குஷியான ரசிகர்கள் இயக்குநர் லோகேஷின் இந்த தன்மையை பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

விக்ரம் படத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக ஷேர் கொடுத்த திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா?