தளபதி 67 திரைப்படம் LCU-வில் இணையுமா? இயக்குநர் லோகேஷ் சொன்ன பதில்..

By Jeeva Jul 03, 2022 10:40 AM GMT
Report

தளபதி 67

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராகியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

மேலும் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்த விக்ரம் திரைப்படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடி தீர்த்துவிட்டனர்.

விக்ரம் திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றியடைய முக்கிய காரணங்களில் ஒன்று LCU, இயக்குநர் லோகேஷின் கைதி படத்தின் கதாபாத்திரங்கள் விக்ரம் படத்தில் வந்ததை பெரிய விஷயமாக பேசிவந்தனர்.

தளபதி 67 திரைப்படம் LCU-வில் இணையுமா? இயக்குநர் லோகேஷ் சொன்ன பதில்.. | Lokesh Answer About Thalapathy 67 And Lcu

படத்தின் அறிவிப்பு நாளில் அப்டேட்

இதனிடையே தற்போது லோகேஷின் இயக்கத்தில் அடுத்து தளபதி விஜய்யின் தளபதி 67 திரைப்படம் உருவாகவுள்ளது. அப்படமும் LCU-வில் இணையுமா என்பது ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ளது.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் இது குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில் தளபதி 67 படத்தின் அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் சார்ப்பில் வெளியாகும் முன் என்னால் பேச முடியாது.

மேலும் தளபதி 67 திரைப்படம் LCU இணையுமா என்பது குறித்து அப்படத்தின் அறிவிப்பு வரும் நாள் மாலையில் நான் அறிவித்து விடுகிறேன் என கூறியுள்ளார்.  

தளபதி 67 திரைப்படம் LCU-வில் இணையுமா? இயக்குநர் லோகேஷ் சொன்ன பதில்.. | Lokesh Answer About Thalapathy 67 And Lcu

மீனா குழந்தை மாதிரி.. கணவர் மரணம் பற்றி பிரபல நடிகர் உருக்கம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US