ரஜினிக்காக இயக்குனர் லோகேஷ் எழுதிய கதை ! ஆனால் விக்ரம்-ஆக மாறியது ஏன் தெரியுமா?
பெரிய எதிர்பார்ப்பில் விக்ரம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விக்ரம் அடுத்த மாதம் 3 ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான அப்படத்தின் ட்ரைலரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பு ஆகியுள்ளது.
இந்நிலையில் படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருப்பதால் இயக்குனர் லோகேஷ் நேர்காணலில் கலந்து பட குறித்த விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

ரஜினிக்காக லோகேஷ் எழுதிய கதை
அப்படி அவர் பேட்டியளிக்கையில் விக்ரம் படத்தின் கதை ரஜினிக்காக உருவாக்கப்பட்டதா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் "ரஜினிக்காக தயார் செய்யப்பட்ட கதை முற்றிலும் மாறுபட்டது, ஆனால் விக்ரம் கமலின் மனதில் நீண்ட நாட்களாக தோன்றிய கதை.
அவர் சொன்ன கதாபாத்திரத்தை நான் என் கதையாக மாற்றியுளேன். மேலும் இது கமலுக்காக எழுதப்பட்ட கதை தான். கோவிட் காரணமாக நிறுத்தப்பட்ட ரஜினியின் திரைப்படம் எதிர்காலத்தில் நடக்க வாய்ப்பிருப்பதாக பேசியுள்ளார் லோகேஷ்.

விக்ரம் சென்சார் முடிந்தது! ரிசல்ட் இதோ.. படம் இவ்ளோ நீளமா?