ரஜினி, கமல் இருவருக்கும் உள்ள வித்தியாசம்.. லோகேஷ் கனகராஜின் அதிரடி பதில்
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. லியோ படத்தை தொடர்ந்து இவர் இப்படத்தை இயக்கி வரும் நிலையில், முதல் முறையாக ரஜினிகாந்துடன் கைகோர்த்துள்ளார்.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அதிரடி பதில்
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்து பேசியுள்ளார்.
அதில், "ரஜினி சார் இயக்குனர்களின் நடிகர். அவர் படத்தில் நடிக்கும் சக நடிகர் எப்படி நடிக்கிறார் என்பதை கவனித்து கொண்டு பதிலுக்கு நாம் எப்படி நடிக்க வேண்டும் என எப்போதும் யோசித்து கொண்டே இருப்பவர்.
கமல் சார் அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒருவர். அவர் ஒரு தொழில்நுட்ப கலைஞர் என்று அவரே கூறுவார். ஆனால், இருவருமே கேமராவுக்கு முன்பு நடிகர் என்பதை மறந்து அந்த காதாபாத்திரங்களாகவே மாறிவிடுவார்கள்" என்று கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கமல்ஹாசன் 'விக்ரம்' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu
