லோகேஷ் - ரஜினிகாந்த் இணையும் படம்.. உறுதி செய்த இயக்குனர்.. அறிவிப்பு எப்போ தெரியுமா
தலைவர் 171
ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு பின் லால் சலாம் படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இதை தொடர்ந்து அடுத்ததாக TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.
லோகேஷ் கொடுத்த அப்டேட்
இந்நிலையில், இதுகுறித்து லோகேஷ் கனகராஜிடம் கேள்வி கேட்டகப்பட்டது. அதற்கு முதலில் ஆம் என தலையாட்டிய லோகேஷ், அதன்பின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அறிவிப்பு வரவேண்டும் என கூறி மழுப்பிவிட்டார்.
விரைவில் லோகேஷ் கனகராஜ் - ரஜினி படம் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற கேள்விக்கு லோகேஷ் கொடுத்த பதில்
மேலும் அவரிடம் கேள்வி எழுப்பிய நிலையில், 10 படங்களில் எடுத்து முடித்து விடலாம் என்ற எண்ணத்தில் தான் தற்போது இருப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி இரும்பு கை மாயாவி தான் தன்னுடைய கனவு படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடைய அடுத்த படத்தை எடுத்து முடித்துவிட்டு தான் கைதி படத்தை எடுக்க போவதாக லோகேஷ் தெரிவித்துள்ளார்.
பட்டத்தை பறிக்க நினைக்கிறாரா விஜய்? ரஜினியால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள்