லோகேஷ் கனகராஜ் படத்தில் தனித்துவமாக தெரியும் விஷயங்கள்.. காரணம் இதுதான்
லோகேஷ் கனகராஜ்
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் அமைத்திருந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர் கார்த்தியுடன் கைகோர்த்த லோகேஷ் கனகராஜ், கைதி எனும் மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கினார். இப்படம் ரூ. 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதன்பின், தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். கொரோனா முதல் அலை முடிந்து திரைக்கு வந்த மாஸ்டர் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கொரோனாவால் தவித்துக்கொண்டிருந்த தமிழ் சினிமாவை விஜய்யின் மாஸ்டர் காப்பற்றியது. மாஸ்டர் வெற்றிக்குப்பின் தனது குருநாதர் கமல் ஹாசனை இயக்கினார். விக்ரம் எனும் மாஸ் தலைப்பில் வெளிவந்த இப்படம் தற்போது உலகளவில் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படக்குழுவிடம் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.
உயிரில்லா பொருட்களுக்கும் முக்கியத்துவம்
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த நான்கு படங்களிலும், நடிகர், நடிகைகளை தாண்டி தனித்துவனமாக இரு பொருட்களை அடையாளப்படுத்தி அதில் மக்களிடம் இருந்து கைத்தட்டல்களையும் பெற்றுள்ளார் லோகேஷ்.
ஆம், மாநகரம் படத்தில் சான்றிதழ், கைதி படத்தில் தங்க கம்மல், மாஸ்டர் படத்தில் சிறுவர்கள் விஜய்க்கு எழுதிய கடிதம், விக்ரம் படத்தில் கமல் பேரனின் பால்புட்டி என உயிரில்லா பொருட்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சியை அமைக்கிறார் லோகேஷ்.
இந்த விஷயத்தை ரசிகர்கள் பாராட்டி, அந்த காட்சியின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதற்க்கு காரணம், ஹாலிவுட்டில் வெளிவந்த காஸ்ட் அவே படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி தான் என்றும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
A film by @Dir_Lokesh ❤️ pic.twitter.com/ETPOTi6n0A
— KARTHIK DP (@dp_karthik) June 25, 2022