லியோ ஆடியோ லான்ச் கேன்சலுக்கு இது தான் காரணமா.. மௌனம் கலைத்த லோகேஷ் கனகராஜ்
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் நாளை வெளியாக இருக்கிறது.
தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு பக்கம் லியோ படம் LCU வா..அல்லது இல்லையா என்ற வாதம் சென்று கொண்டு இருக்கிறது.

ஆடியோ லான்ச்
இந்நிலையில் லியோ படம் நாளை வெளியாகுவதையொட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் லோகேஷ் கனகராஜ். அப்போது பேசிய அவர், ரோகினி திரையரங்கில் சீட்டுக்களை உடைத்திருக்கக்கூடாது.
ஒரு திரையரங்கில் ட்ரைலர் வர வேண்டுமென்றால் சென்சார் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள், நாங்கள் யூட்யூபில் போட்ட லிங்க்கை எடுத்து திரையரங்கில் போட்டார்கள்.
கொஞ்சம் பேரு இருக்கும் இடத்தில் மூன்று மடங்கு ஆட்கள் இருந்தால் அப்படி தான் கலவரம் நடக்கும். இந்த மாதிரி பிரச்சனை வர கூடாது என்பதற்காக தான் ஆடியோ லான்ச் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்

கனடாவில் உயர்ந்த சம்பள வேலையை விட்டு, பெற்றோருக்காக நாடு திரும்பும் இந்திய வம்சாவளி பெண் News Lankasri