ரஜினி - கமல் படத்தில் இருந்து வெளியேறியது இதனால் தான்.. லோகேஷ் கனகராஜ் போட்டுடைத்த உண்மை
கூலி படத்திற்கு பிறகு ரஜினி மற்றும் கமல் இருவரும் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க போகிறார் என கூலி ஷூட்டிங் நேரத்திலேயே தகவல் வந்தது. ஆனால் அந்த படத்தில் இருந்து லோகேஷ் திடீரென வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு சுந்தர்.சி அந்த படத்தை இயக்குவதாக அறிவிக்கப்படாதது. அவருக்கு இரண்டு நாளில் வெளியேறிவிட்டார்.
அடுத்து டான் பட புகழ் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். அந்த படம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் போட்டுடைத்த உண்மை
இந்நிலையில் ரஜினி - கமல் படத்தில் இருந்து தான் வெளியேறியது ஏன் என்கிற காரணத்தை லோகேஷ் ஒரு நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.
கைதி 2 படத்தை விட்டுவிட்டு ரஜினி - கமல் படத்திற்காக வந்தாராம் லோகேஷ் கனகராஜ். ஆனால் அவர் சொன்ன கதை பிடித்தாலும், அது வேண்டாம் ஒரு லைட் ஹார்ட்டட் படம் தான் வேண்டும் என ரஜினி - கமல் இருவரும் கூறினார்களாம்.
அந்த மாதிரி படம் என்னால் பண்ண முடியாது என கூறிவிட்டு லோகேஷ் வெளியேறிவிட்டாராம். அதன் பிறகு தான் லோகேஷ் தற்போது அல்லு அர்ஜுன் படத்தில் பணியாற்ற தொடங்கி இருக்கிறார்.
5,000 ஏக்கர் நிலப்பரப்பில் பற்றியெரியும் காட்டுத்தீ: உயிரைக் கொடுத்து போராடும் தீயணைப்பு வீரர்கள் News Lankasri
வந்தே மாதரம் பாடல் சர்ச்சை... முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – திருமாவளவன் காட்டம்! IBC Tamilnadu