சுதா கொங்கரா படத்தில் லோகேஷ் கனகராஜின் ரோல் இதுதானா!! எகிறும் எதிர்பார்ப்பு..
சுதா கொங்கரா.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் சுதா கொங்கரா. இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் கூட்டணி வைத்தார். ஆனால் சில காரணத்தால் சூர்யா பத்தியில் வெளியேறிவிட்டார் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் தகவல்!!
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 25வது படத்தை சுதா கொங்கரா இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் துல்கர் சல்மான் முதலில் நடிக்கவிருந்ததாகவும் ஆனால் சில காரணத்தால் அவருக்கு பதிலாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்கிறாராம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் எனவும் எதிர்ப்பாக்கப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
