தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
லோகேஷ் கனகராஜ்
லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவது கைதி 2 என்று தான் அனைவரும் எதிர்பார்த்த காத்திருந்தனர்.
ஆனால், சர்ப்ரைஸாக தலைவர் 171 படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை லோகேஷ் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் கைதி, விக்ரம், லியோ போன்ற லோகேஷ் படங்களில் பணிபுரிந்த அன்பு, அறிவு மாஸ்டர்ஸ் தான் தலைவர் 171 படத்திற்கும் ஸ்டண்ட் மாஸ்டர்களாக கமிட் ஆகியுள்ளனர்.
பிரமாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் சம்பளம்
இந்நிலையில், இந்த படத்தை இயக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ. 45 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்குமுன் லோகேஷ் இயக்கிய லியோ படத்திற்காக ரூ. 30 முதல் ரூ. 35 கோடி வரை சம்பளம் வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.