50 கோடி ஆஃபர் பெற்ற லோகேஷ் கனகராஜ் கைதி படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா, இதோ
லோகேஷ் கனகராஜ்
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இன்று இந்தியளவில் பிரபலமாகியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இவர் தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக கைதி 2 படத்தையும் இயக்கவுள்ளார். அதுமட்டுமின்றி ரஜினியே லோகேஷ் கனகராஜ் அழைத்து படம் பண்ணலாம் என்று கூறியுள்ளாராம்.

அதே போல் பாலிவுட் ஹீரோ சல்மான் காணும் லோகேஷ் கனகராஜிற்கு ரூ. 50 கோடி சம்பளம் பேசி புதிய படத்திற்கு ஆஃபர் செய்துள்ளார்.
சம்பளம்
இப்படி தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தது மாநகரம் மற்றும் கைதி படங்கள் தான். அப்படி லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்த மாநகரம் படத்திற்காக குறைவான சம்பளம் தான் வாங்கியுள்ளார்.

மேலும் கைதி படத்திற்காக ரூ. 50 லட்சம் சம்பளமாக லோகேஷ் கனகராஜ் வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
சினிமாவில் இருந்து விலகுகிறாரா நயன்தாரா.. காரணம் என்ன