அஜித் - லோகேஷ் கனகராஜ் இணையும் படம்.. லோகேஷ் கூறிய அப்டேட்
அஜித் - லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் தற்போது இந்திய திரையுலகமே திரும்பி பார்க்கக்கூட இயக்குனராக வளர்த்துள்ளார். இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய நான்கு படங்களும் மாபெரும் வெற்றியை தழுவியது.
இதை தொடர்ந்து லோகேஷ் இயக்கி வரும் திரைப்படம் தான் லியோ. தாபத்தி விஜய்யுடன் மீண்டும் லோகேஷ் இணைந்துள்ள இப்படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் காத்துக்கொண்டிருக்கிறது.
லியோ படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் ரஜினியின் படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது. ஆனால், இப்படம் குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. அதே போல் கைதி 2 படமும் எப்போது படப்பிடிப்பு துவங்கும் என்றும் இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை.
அஜித் - லோகேஷ் கனகராஜ்
இந்நிலையில், அஜித்துடன் படம் பண்ணுவது குறித்து லோகேஷ் பேசியுள்ளார். சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷிடம் அங்கிருந்த ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பினார்கள்.
அதில் ஒருவர், எப்போது அஜித்துடன் படம் பண்ணுவீங்க என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த லோகேஷ், 'வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பண்ணுவேன்' என கூறியுள்ளார். இதை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
சமந்தாவை போல் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 33 வயது நடிகை.. யார் தெரியுமா