சமந்தாவை போல் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 33 வயது நடிகை.. யார் தெரியுமா
சமந்தா - மயோசிட்டிஸ்
இந்தியளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் சமந்தா. இவர் கடந்த ஆண்டு மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்தார்.
அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார். இந்நிலையில், சமந்தாவை தொடர்ந்து பிரபல நடிகை நந்திதாவும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என ஷாக்கிங் செய்தி வெளிவந்துள்ளது.
நோயால் பாதிக்கப்பட்ட நந்திதா
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை நந்திதா 'ஃபைப்ரோமியால்ஜியா' என்ற தசை சம்மந்தப்பட்ட நோயால் அவதிப்படுவதாக கூறினார் இந்த நோய் பாதிப்பால் உடல் எடையில் ஏற்ற இறக்கம் ஏற்படும் என்றும், ஒரு சின்ன வேலை செய்தால் கூட தசைகளில் பிரச்சனை ஏற்படும் அளவுக்கு இந்த நோய் தீவிரமானது என்று கூறினார்.
இதன் காரணமாக கடினமான உடற்பயிற்சிகளை செய்ய முடியாது என கூறிய நந்திதா, சில சமயங்களில் உடல் அசைவுகளுக்கே கஷ்டப்படும் அளவுக்கு இதன் பாதிப்பு இருக்கும் என கூறினார். மேலும் இதனால் விரைவில் சோர்வடைவதோடு, நினைவாற்றல் குறைபாடுகளும் ஏற்படும் என கூறியுள்ளார். இப்படிப்பட்ட பல கஷ்டங்களை கடந்து தான் நடிகை நந்திதா ஹிடிம்பா படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்தாராம்.
ரசிகர் செயலால் மேடையிலிருந்து தெறித்து ஓடிய நடிகர் விஜய்.. வைரலாகும் வீடியோ

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
