நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்.. அதுவும் யாருடன் இணைந்து நடிக்கிறார் தெரியுமா
லோகேஷ் கனகராஜ்
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதன்பின் கைதி, மாஸ்டர் சமீபத்தில் விக்ரம் என தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.
அடுத்ததாக விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். பிரமாண்ட நட்சத்திரங்களுடன் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகராக அறிமுகம்
இந்நிலையில், இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகராகவும் அவதாரம் எடுக்கவுள்ளார். ஆம், கோகுல் இயக்கத்தில் ஆர். ஜே. பாலாஜி நடிக்கவிருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடிக்கப்போகிறாராம்.
லோகேஷ் கனகராஜ் இதற்க்கு முன் மாஸ்டர் படத்தில், கிளைமாக்ஸ் காட்சியில் ஒரே ஒரு நிமிடம் மட்டும் நடித்திருப்பார். அதுவும் விஜய் கூறியதற்காக நடித்ததாக லோகேஷ் தெரிவித்திருந்தார்.
ஐந்து நாட்களில் லவ் டுடே செய்த வசூல்.. பாக்ஸ் ஆபிசில் குவிந்து வரும் பல கோடி