தளபதி 67 படத்திற்காக இயக்குநர் லோகேஷ் வாங்கவுள்ள சம்பளம்! நடிகர்களை மிஞ்சிய இயக்குநர்..
பிளாக் பஸ்டர் விக்ரம்
தமிழ் சினிமாவின் தற்போதைய இயக்குநர்களில் டாப் இயக்குநராக மாறியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்கத்தில் வெளியான நான்கு திரைப்படங்களும் பிளாக் பஸ்டர்.
அதன்படி மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் அவரே இயக்கியிருப்பதால் அப்படத்தின் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அதனை பூர்த்தி செய்யும் வகையில் விக்ரம் திரைப்படமும் இந்தியளவில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் தற்போது வரை உலகளவில் ரூ.320 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருக்கிறது.
விக்ரம் படத்தின் இதன்முலம் தனக்கென ஒரு LCU என்ற Universe-யை தொடங்கியுள்ளார் லோகேஷ். இனி வரும் திரைப்படங்களில் இதனை விரிவுபடுத்த விரும்புவதாகவும் அவர் இயக்கும் அடுத்தடுத்த திரைப்படங்களில் LCU என பெயர் இடம் பெறும் எனவும் கூறியுள்ளார்.

பெரிய எதிர்பார்பில் தளபதி 67
இந்நிலையில் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் அடுத்து தளபதி விஜய்யை அவரின் 67-வது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வரவில்லை.
இதனிடையே இப்படத்திற்காக இயக்குநர் லோகேஷ் ரூ. 10 கோடியை சம்பளமாக வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri