இடது காலை இழந்த லொள்ளு சபா நிகழ்ச்சி பிரபலம்.. நேரில் சந்தித்த பிரபலங்கள்
லொள்ளு சபா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிறைய ரியாலிட்டி ஷோக்கள் மக்களிடம் மிகவும் பிரபலம், அப்படி ஒரு ஹிட் ஷோ லொள்ளு சபா.
இந்நிகழ்ச்சி மூலம் வெள்ளித்திரைக்கு வந்த பிரபலங்கள் பலர் உள்ளார்கள், நிறைய கலைஞர்களுக்கு ஒரு அடிதளமாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடித்தவர்களில் ஒருவர் தான் சிரிக்கோ உதயா, இவர் சினிமாவில் காமெடி ரோலிலும், குணச்சித்திர ரோலிலும் நடித்துள்ளார்.
பல படங்களுக்கு காமெடி காட்சிகளுக்கு வசனங்கள் எழுதி கொடுத்துள்ள இவர் வயலின் கலைஞராகவும் சினிமாவில் ஜொலித்தார். 35 வருடங்களுக்க மேலாக சினிமாவில் பல துறைகளில் கலக்கி வருகிறார்.
சிகிச்சை
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சிரிக்கோ உதயா சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் காரணமாக இடது காலை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. சிரிக்கோ உதயாவை மருத்துவமனை சென்று நலம் விசாரித்துள்ளார்கள் நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங்.
இதோ அவர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோ,

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
