ஒல்லி பெல்லியாக மாற லாஸ்லியா இதை தான் சாப்பிட்டாராம்.. இதோ அந்த சீக்ரெட்
லாஸ்லியா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக மாறியுள்ளார் லாஸ்லியா. இவர் சமீபத்தில் தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.
அப்படி ஒல்லி பெல்லியாக மாற லாஸ்லியா என்ன செய்தார் தெரியுமா, வாங்க பார்க்கலாம்.. உடல் எடையை குறைக்க முடிவு செய்த லாஸ்லியா முதலில் மட்டன் சாப்பிடுவதை கைவிட்டாராம். ப்ரோடீன் தேவை என்பதினால் சிக்கன் மட்டும் எடுத்து கொள்வாராம்.
ஒல்லி பெல்லியாக மாறிய சீக்ரெட்
அதே போல் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் ஜிம் ஒர்கவுட் மற்றும் 2 மணி நேரம் யோகா செய்வாராம். அரிசி சாதத்திற்கு பதிலாக தினை வகைகளை மதிய உணவாக மாற்றிக்கொண்டாராம். சாமை, தினை, குதிரை வாலி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினை வகையை உணவாக சாப்பிட்டுள்ளார்.
முக்கியமாக லாஸ்லியாவின் உடல் எடையை குறைக்க க்ரீன் ஆப்பிள் மிகவும் உதவியதாம். ஏனென்றால் இந்த க்ரீன் ஆப்பிளில் சக்கரை மிக மிக குறைவு என்கின்றனர்.
காலை கோதுமை ரொட்டி, மதியம் தினை வகை உணவு, மாலை ஜூஸ் மற்றும் சான்வெட்ஜ் தான் லாஸ்லியா பின்பற்றிய உணவு முறை. இரவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பாராம். இவை தான் லாஸ்லியாவின் உடல் எடையை குறைக்க உதவியது.
பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய போர் தொழில்.. மூன்று நாட்களில் சென்சேஷனல் வசூல்

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
