பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய போர் தொழில்.. மூன்று நாட்களில் சென்சேஷனல் வசூல்
போர் தொழில்
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் போர் தொழில். இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார்.
நிகிலா விமல் மற்றும் சரத்பாபு முக்கிய ரோலில் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்து விமர்சன ரீதியாக இப்படம் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
அதே போல் முதல் நாள் வசூலில் சற்று பின்னடைவு இருந்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் அதிகரிக்க துவங்கியுள்ளது.
வசூல்
அதன்படி இப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை ரூ. 5.25 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
மூன்று நாட்களில் இப்படத்திற்கு கிடைத்துள்ள சென்சேஷனல் வசூல் என கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் வசூல் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா.. 52 வயதாலும் ரஜினியுடன் நடித்து வருகிறார், இதோ பாருங்க

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
