இந்த சூப்பர் ஷோவிற்கு வருகிறாரா நடிகை லாஸ்லியா- செம குஷியில் ரசிகர்கள்
இலங்கை தமிழ் பெண் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமா மக்களுக்கு அறிமுகமானவர் லாஸ்லியா.
பின் பிக்பாஸ் பிரபலம் என கொண்டாடப்பட்ட இவர் இப்போது நாயகியாக வலம் வருகிறார்.
படங்களின் விவரம்
பிக்பாஸ் முடிந்த கையோடு படங்கள் கமிட்டாகி வந்த லாஸ்லியா நிறைய போட்டோ ஷுட்டும் அதிகம் நடத்தி வந்தார். உடல் எடை எல்லாம் குறைத்து முடியை கட் செய்து இப்போது ஆளே மாறிவிட்டார்.
அர்ஜுன்-சதீஷுடன் ஃபிரண்ட்ஷிப் என்ற படம் நடித்திருந்தார், தற்போது கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்திருக்கிறார், விரைவில் படம் வெளியாக இருக்கிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி
லாஸ்லியா பிஸியாக படங்கள் நடித்து வந்தால் சில தனியார் நிகழ்ச்சி என கலந்துகொண்டு தான் வருகிறார். தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக போகும் போட்டிக்கு போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறாராம்.
நடிகை ஹன்சிகா ஏமாற்றம் - படத்தை குறித்து உருக்கமாக பேசிய ஹன்சிகா