மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தமிழ் சினிமாவில் வந்த காதல் தோல்வி படங்கள்- ஒர் பார்வை
காதல் எல்லோரின் வாழ்க்கையிலும் பெரிய பங்கை வகிக்கிறது. சிலருக்கு அது சுகத்தை தரும், பலருக்கு மன வேதனையை தரும்.
சினிமாவில் சந்தோஷம் தந்த, துக்கத்தை தந்த காதல் கதைகள் அதிகம் வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் வெளியான மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய காதல் தோல்வி படங்களின் சிலவற்றை காண்போம்.
தளபதி (1991)
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி, ஷோபனா என பலர் முக்கிய நடிப்பில் வெளியான திரைப்படம் தளபதி. ரஜினிக்கும், ஷோபனாவிற்கும் உள்ள காதல் மிகவும் அழகாக காட்டப்படும்.
பின் அவர்களின் பின்னணி உள்ள வேறுபாடுகளால் இவர்களது காதல் பிரிவில் முடியும். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது ஒரு காதல் தோல்வி படம்.
96 (2018)
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி-த்ரிஷா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம். காதல் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் கூட இப்படத்தை பார்த்து கண் கலங்கி தான் வந்தார்கள். அந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு காதல் பிரிவு படம்.
விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு-த்ரிஷா நடித்த திரைப்படம். இந்துவான கார்த்திக்கும், மலையாள கிறிஸ்துவ பெண்ணான ஜெஸ்ஸிக்கும் மலரும் காதல் கதை. பின் அந்த காதலால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பேசும் படம். பாடல் ஹைலைட், கதை, அதோடு நடிகர்கள் என படமே சூப்பராக இருந்தாலும் காதலில் தோல்வியுற்ற பெரிய தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்திய ஒரு படம்.
மூன்றாம் பிறை (1982)
பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல்-ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த ஒரு காதல் காவியம். 330 நாட்களுக்கு மேல் ஓடிய இப்படத்தை ஹிந்தியில் சந்மா என்ற பெயரிலும் வெளியிட்டார் இயக்குனர். தேசிய திரைப்பட விருது, பிலிம்பேர் விருது, தமிழக அரசு விருதுகள் என படம் பல விருதுகளை குவித்துள்ளது.
கும்கி (2012)
பிரபு சாலமன் இயக்கத்தில் சிவாஜி கணேவன் பேரன் என்ற அடையாளத்தோடு கும்பி படம் மூலம் நாயகனாக அறிமுகமானார் விக்ரம் பிரபு. லட்சுமி மேனன், விக்ரம் பிரபு ஜோடி இப்படத்தில் அதிகம் கொண்டாடப்பட்டது. பெண்ணை தாண்டி தான் வளர்த்த யானையையும் தனது மாமாவையும் நேசித்து வந்தவர் இறுதியில் அவர்களை இழக்க படத்தை முடித்து வெளியே வரும் போது மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் படம்.
காதல் (2004)
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத்-சந்தியா நடித்த திரைப்படம். நிஜ சம்பவத்தை மையமாக கொண்டு வந்த படம், நிஜமாக காதலிக்கும் இருவர் தகுதி காரணமாக பிரிய பின் பல வருடங்கள் கழித்து அவர்களுக்குள் சந்திப்பு நடக்கிறது. அதுதான் படத்தில் மன வலியை கொடுக்கும் ஒரு விஷயம்.
அட நம்ம கோவை சரளாவா இது, முகம் எல்லாம் மாறி ஆளே மாறிவிட்டாரே?- வித்தியாசமான லுக்