LiK திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போ? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்
LiK
பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகி கடந்த 10ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் Love Insurance Kompany. இப்படத்தை நயன்தாரா மற்றும் லலித் குமார் இணைந்து தயாரித்திருந்தனர்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து சீமான், மாளவிகா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

சற்று வித்தியாசமான காதல் கதைக்களத்தில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த LiK, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால், வசூலிலும் இப்படம் சற்று பின்னடைவை சந்தித்தது.
ஓடிடி
இந்த நிலையில், LiK திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற மே 15ஆம் தேதி இப்படம் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
நூலகத் துறையிலும் Party Fund, தவெக அரசு மிகக் கடுமையாகத் தண்டிக்கும் - அமைச்சர் அருண்ராஜ் IBC Tamilnadu
இது தொடக்கம் மட்டுமே... மின்னஞ்சலில் மிரட்டல்: ஐரோப்பா முழுவதும் விமானங்களை முடக்கிய குழு News Lankasri
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri