கடனை திருப்பி கொடுத்த முத்து, மீனா.. அதிர்ச்சியில் சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியல்

By Karthick Raja Apr 25, 2026 04:50 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

மனோஜ், விஜயா இருவரும் தனக்கு தெரியாமல் சொந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம் அண்ணாமலையை பெரும் அளவில் காயப்படுத்திவிட்டது. மேலும், ரூ. 48 லட்சத்தை மூன்று மாதத்திற்குள் திருப்பி தர வேண்டும், இல்லையென்றால் வீட்டை ஏலத்திற்கு விட்டுவிடுவேன் என கடன் கொடுத்தவன் மிரட்டிவிட்டு சென்றுள்ளான்.

கடனை திருப்பி கொடுத்த முத்து, மீனா.. அதிர்ச்சியில் சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியல் | Muthu Meena Returned 10 Lakhs In Siragadikka Aasai

இந்த கடனை நாங்கள் அடைக்கிறோம் என முத்து, மீனா முடிவு செய்துள்ளனர். ரூ. 48 லட்சத்தை எப்படி திருப்பி தரப்போகிறோம் என முத்து, மீனா இருவரும் பேசிக்கொண்டிருக்க, அப்போது தங்கத்தில் உள்ள தாலியை விற்றால், அதில் ரூ. 5 லட்சம் கிடைக்கும் என மீனா கூறுகிறார்.

முத்து, மீனா

இதன்பின், பாட்டி கொடுத்த தங்கம் இருக்கிறது, அதை அடமானம் வைத்தால் ரூ. 4 லட்சம் கிடைக்கும் என முத்து கூற, ரூ. 48 லட்சத்தில் தற்போது ரூ. 9 லட்சம் தயாராகிவிட்டது. மீதியுள்ள பணத்தை தாங்கள் இருவரும் உழைத்து அதில் வருவதை சேமித்து கடனை அடைக்க முடிவு செய்கின்றனர்.

கடனை திருப்பி கொடுத்த முத்து, மீனா.. அதிர்ச்சியில் சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியல் | Muthu Meena Returned 10 Lakhs In Siragadikka Aasai

மைக்கேல் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

மைக்கேல் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில், அடுத்த வார புரோமோ வெளியாகியுள்ளது. இதில், ரூ. 10 லட்சத்தை கடன் கொடுத்தவனிடம் சென்று முத்து, மீனா தருகின்றனர். ரூ. 48 லட்சம் கடனில் ரூ. 10 லட்சம் கழிந்துவிட்டது என கூறிவிட்டு இருவரும் செல்ல, அங்கு சிந்தாமணி வருகிறார். இவர்கள் இருவரும் கடனை அடைத்துவிட்டு, சொந்த வீட்டில் சந்தோஷமாக இருக்க பார்க்கிறார்களா, அதற்கு நான் விடமாட்டேன் என கூறுகிறார்.

கடனை திருப்பி கொடுத்த முத்து, மீனா.. அதிர்ச்சியில் சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியல் | Muthu Meena Returned 10 Lakhs In Siragadikka Aasai

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US