முன்னணி நடிகர்களை மிஞ்சிய அறிமுக நடிகர் பிரதீப்.. வசூல் வேட்டையில் லவ் டுடே சாதனை
பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கிய இரண்டாவது படம் தான் லவ் டுடே. இப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் இதில் ஹீரோவாகவும் அவரே நடித்திருந்தார்.
கதாநாயகியாக இவானா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
காதல் கதைக்களத்தில் இளைஞர்களை கவரும் வண்ணம் அமைத்திருந்த இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.
வசூல் வேட்டை
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வசூலில் புதுப்புது சாதனைகளை படைத்து வரும் லவ் டுடே திரைப்படம் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை படைத்துள்ளது.
பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் கூட செய்யமுடியாத வசூல் சாதனையை பிரதீப்பின் அறிமுக திரைப்படம் செய்துள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
