பொங்கலுக்கு 'லவ் டுடே', 'வெந்து தணிந்தது காடு': புது படங்களை களமிறக்கும் சேனல்
பொங்கல் பண்டிகைக்கு அனைத்து சேனல்களும் புதுப்புது படங்களாக திரையிடப்போவதாக அறிவித்து இருக்கின்றன.
கடந்த வருடம் ரிலீஸ் ஆகி சூப்பர்ஹிட் ஆன இரண்டு படங்களை திரையிட போவதாக கலைஞர் டிவி அறிவித்து இருக்கிறது.
சிவகார்த்திகேயனின் டான், பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே மற்றும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் தான் கலைஞர் டிவியில் பொங்கலுக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
கலைஞர் டிவி - பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்
ஜனவரி 15 காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனியின் சிறப்பு பட்டிமன்றம், காலை 10 மணிக்கு சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்த டான், பிற்பகல் 1.30 மணிக்கு பிரதீப் ரங்கநாதன், இவானா நடிப்பில் 2022-ல் வசூலை வாரிக் குவித்த "லவ் டுடே" சூப்பர்ஹிட் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.
ஜனவரி 16 மாட்டுப்பொங்கலன்று பிற்பகல் 1.30 மணிக்கு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் "வெந்து தணிந்தது காடு" படமும், காலை 10 மணிக்கு ஆர்யா, சுந்தர்.சி நடிப்பில் "அரண்மனை 3" சிறப்பு திரைப்படமும், மதுரை முத்துவின் சிரிப்பு பட்டிமன்றமும் ஒளிபரப்பாக இருக்கிறது.
முன்னணி நடிகை சாய் பல்லவிக்கு இப்படியொரு நிலைமையா? வருத்தத்தில் ரசிகர்கள்

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட இளம்பெண்: பிரபல நடிகையின் சகோதரி குஷ்பூவுக்கு குவியும் பாராட்டுகள் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
