முன்னணி நடிகை சாய் பல்லவிக்கு இப்படியொரு நிலைமையா? வருத்தத்தில் ரசிகர்கள்
சாய் பல்லவி
மலையாளத்தில் அறிமுகமாகி, அதன்பின் தென்னிந்தியளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் தியா எனும் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
இதன்பின் மாரி 2, என்.ஜி.கே உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். இதன்பின் கடந்த ஆண்டு கார்கி எனும் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.
இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கிறார். கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
இப்படியொரு நிலைமையா
இந்நிலையில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.24 எனும் வெறும் ஒரே ஒரு படத்தை மட்டுமே கைவசம் வைத்துள்ளார்.
இப்படத்தை தவிர்த்து வேறு எந்த ஒரு படமும் சாய் பல்லவி கைவசம் இல்லை என்பதினால் சாய் பல்லவிக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது என்ற பேச்சு திரை வட்டாரத்தில் எழுந்துள்ளது.
வெற்றிகரமான முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவிக்கே இப்படியொரு நிலைமையா என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
துணிவு பட நடிகை மஞ்சு வாரியரின் மகளை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறராரே

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
