வலிமை, பீஸ்ட் வசூலை விட அதிகம் வசூல் செய்த லவ் டுடே.. எவ்வளவு தெரியுமா
லவ் டுடே
கடந்த நவம்பர் 4ஆம் தேதி வெளிவந்த மாபெரும் வசூல் சாதனையை படைத்து வரும் திரைப்படம் லவ் டுடே.
பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்கி, அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். மேலும் இவானா, யோகி பாபு, சத்யராஜ், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
தமிழில் ரூ. 80 கோடியை கடந்து வசூல் செய்துகொண்டிருக்கும் லவ் டுடே திரைப்படம் கடந்த வாரம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது.
பாக்ஸ் ஆபிஸ்
தமிழில் கிடைத்த ஆதரவிற்கு இணையாக தெலுங்கிலும் லவ் டுடே படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், தெலுங்கில் விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித்தின் வலிமை இரு திரைப்படங்களும் செய்த வசூலை விட ரூ. 12 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது லவ் டுடே.
Also Read This : நடிகர் ரஜினியுடன் ஏ.ஆர். ரகுமான் கியூட்டான செல்பி- லேட்டஸ்ட் க்ளிக்

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
