OTTயில் ரிலீஸ் ஆகப்போகும் மிகப்பெரிய ஹிட் திரைப்படம் லவ் டுடே- எப்போது தெரியுமா?
லவ் டுடே
2022ம் வருடம் ஆரம்பித்ததில் இருந்து எத்தனையே படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன.
அதிலும் முன்னணி நடிகர்களான விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, கமல்ஹாசனின் விக்ரம், சூர்யாவின் எதற்கும் துணிந்தவர், சிவகார்த்திகேயனின் டான், விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் என வெளியாகின.
ஆனால் இப்படங்கள் எல்லாம் செய்யாத வசூல் சாதனைகளை வெறும் ரூ.5 கோடியில் எடுக்கப்பட்ட திரைப்படம் செய்து வருகிறது. வேறு எந்த படமும் இல்லை இளம் கலைஞன் பிரதீப் இயக்கி, நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் தான்.
ஒரேஒரு கான்செப்ட் தான் படத்தை இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

OTT ரிலீஸ்
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 70 கோடி வரை வசூல் சாதனை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது.
அதாவது படம் டிசம்பர் 2ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் யாரை சந்தித்துள்ளார் பாருங்க- சூப்பர் புகைப்படம்
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri