பிக்பாஸில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் யாரை சந்தித்துள்ளார் பாருங்க- சூப்பர் புகைப்படம்
ராபர்ட் மாஸ்டர்
பிக்பாஸ் 6வது சீசனில் மிகவும் ஸ்ட்ராங்கான போட்டியாளராக மக்களால் முதலில் பார்க்கப்பட்டவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். ஆனால் அவரோ விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதை விட நடிகை ரச்சிதா பின்பு சுற்றுவதையே முக்கிய வேலையாக பார்த்தார்.
இதனால் கோபமான மக்கள் அவருக்கு ஓட்டு போடாமல் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்கள்.
இத்தனை நாட்கள் வீட்டில் இருந்த ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு வாரம் ரூ. 1.50 முதல் ரூ. 2 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாது.
சந்தித்த முதல் நபர்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் முதலில் அசல் கோளாரை சந்தித்துள்ளார் என தெரிகிறது. இருவரும் ஒரு இடத்தில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அசல் கோளாரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த புகைப்படத்திற்கும் ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
ரோஜா சீரியல் நாயகன் சிப்புவின் எமோஷ்னல் பதிவு- வருத்தப்படும் ரசிகர்கள்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
