கேரளாவை ஆளும் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு அங்கு வரவேற்பு இல்லையா?- இதான் காரணமா?
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் பெரிய நிறுவனம். இவர்கள் ஒரு படம் எடுக்கிறார்கள் என்றால் அதை பெரிய அளவில் புரொமோஷன் செய்வார்கள்.
அப்படி அவர்கள் தயாரித்திருக்கும் ஒரு பெரிய நடிகரின் படம் விஜய்யின் பீஸ்ட்.
படத்தின் கரு
ஒரு பெரிய மாலை சூழ்ந்து தீவிரவாதிகள், அவர்களிடம் இருந்து மக்களை பத்திரமாக காப்பாற்றி எப்படி வெளியேறுகிறார் ஹீரோ என்பது கதையாக இருக்கிறது.
இதில் விஜய் எப்படிபட்ட நடிப்பை வெளிக்காட்ட இருக்கிறார், எவ்வளவு மாஸாக இருக்கப்போகிறது என்பது எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
படத்தின் டிரைலர் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகி இருந்தது, ரசிகர்கள் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.

கேரளாவில் விஜய்யை முந்திய யஷ்
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக இருக்கிறது, இப்படத்திற்கான புரொமோஷன் வேலைகள் எல்லாம் படு வேகமாக நடந்து வருகின்றன.
அதேசமயம் கன்னட சினிமாவில் தயாராகி பல மொழி மக்களால் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்ட KGF படத்தின் 2ம் பாகமும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.
விஜய்யின் போர்ட் கேரளா என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் இப்போது அங்கு விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு வரவேற்பு இல்லையாம், அதற்கு பதிலாக யஷ் நடித்துள்ள KGF Chapter 2 படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 6 பைனலிஸ்ட் இவர்களா?- ஜெயிக்கப்போவது யார்?