ரிஸ்க் எடுக்க முடிவு செய்தேன்.. ஹரிஷ் கல்யாண் மாமியார் சொன்ன அதிரடி தகவல்
லப்பர் பந்து
கடந்த 20ஆம் தேதி வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருக்கும் திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்தார்.
கிரிக்கெட் விளையாட்டு குறித்து பேசிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், இப்படத்தில் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்த ஸ்வாசிகா பேட்டி ஒன்றில் சுவாரசியமான பல விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
சுவாசிகா பேட்டி
அதில், "சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் நடித்துள்ளேன். அசோதா போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் வரம்.
இந்த படத்திற்காக பல சினிமா நட்சத்திரங்கள் என்னை அழைத்து பாராட்டி உள்ளனர். புதுமுகமான எனக்கு இதுபோன்ற அன்பான வரவேற்பு உண்மையிலேயே பெரும் நம்பிக்கைதான்.
இந்த படத்தில் முதலில் ஹரிஷ் கல்யாண் மாமியாராக நடிக்க நான் பலமுறை யோசித்தேன். ஹரிஷ் மாமியார் என்ற முத்திரைக் குத்தப்படுவோம் என்றும் எண்ணினேன்.
ஆனால் அதை பற்றி கவலை கொள்ளாமல் ரிஸ்க் எடுத்து நடித்தேன். தற்போது, இந்த கதாபாத்திரத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
