வசூல் சாதனை படைக்கும் எம்புரான்.. ப்ரீ புக்கிங்கில் இத்தனை கோடியா

Kathick
in திரைப்படம்Report this article
லூசிஃபர்
பிரித்விராஜ் அறிமுக இயக்கியத்தில் உருவான திரைப்படம் லூசிஃபர். முதல் படத்திலேயே மோகன்லாலை இயக்கியிருந்தார். இப்படம் உலகளவில் ரூ. 145 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற நிலையில், லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வருகிற 27ம் தேதி லூசிஃபர் 2: எம்புரான் திரைப்படம் வெளிவரவுள்ளது.
முந்தைய படத்தை விட பன்மடங்கு பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், லூசிஃபர் 2: எம்புரான் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது பட்டையை கிளப்பி வருகிறது.
ப்ரீ புக்கிங்
ஆம், மலையாள சினிமாவில் வரலாறு காணாத ப்ரீ புக்கிங் வசூலை எம்புரான் திரைப்படம் செய்துள்ளது. ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 65 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே வசூல் செய்துள்ளது.
இதன்மூலம் கண்டிப்பாக முதல் நாள் வசூல் மாபெரும் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.