7 நாட்களில் லக்கி பாஸ்கர் படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
துல்கர் சல்மான்
மலையாள திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று இந்தியளவில் பிரபலமாகியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தமிழில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் தமிழில் பெரிய ஹிட் படம் எதுவும் வெளிவரவில்லை. ஆனால், தெலுங்கில் வெளிவந்த சீதா ராமம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட காதலி, 5 முறை தற்கொலை முயற்சி... தனது சோக கதையை சொன்ன பிக்பாஸ் பிரபலம்
லக்கி பாஸ்கர் வசூல்
கடந்த வாரம் தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த படம் தான் லக்கி பாஸ்கர். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, ராம்கி ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் 7 நாட்களில் லக்கி பாஸ்கர் படம் செய்துள்ள வசூல் குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, லக்கி பாஸ்கர் படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 71.2 கோடி வரை வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எந்த அளவிற்கு வசூல் செய்யும் என பொறுத்திருந்து பார்ப்போம்.