எந்திரன் படத்தை பார்த்துவிட்டு கலைஞர் என்ன சொன்ன தெரியுமா?.. வைரலாகும் வீடியோ!!
எந்திரன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.
பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டிருந்த இப்படம், ஹாலிவுட் சினிமாவிற்கு நிகராக சொல்லப்பட்டது. மேலும் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான ஒவ்வொரு பாடலும் இன்றும் மக்கள் மத்தியில் இன்றும் புத்துணர்வு குறையாமல் இருக்கின்றது.
வீடியோ
இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர், ரஜினிகாந்தின் எந்திரன் திரைப்படம் பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர், இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மாறுபட்டு இருக்கிறது. இயக்குனரின் அபாரமான கற்பனையும், ஒளிப்பதிவாளர் கேமராவை கையாண்ட முறையும், ரஜினிகாந்தின் மாறுபட்டு நடிப்பும் அருமையாக இருக்கிறது என்று கலைஞர் கூறியுள்ளார்.